Monday 27 June 2011

கணக்கதிகாரம் - விளாம்பழ கணக்கு

,
ஒரு பழக்கடைக்காரர் விளாம்பழங்களை விற்று வந்தார்.அவர் அசந்த நேரம் பார்த்து சில சிறுவர்கள் பழங்களை திருடி சென்றுவிட்டனர்.பழக்கடைகாரர் அரசனிடம் சென்று முறையிட்டார்.அரசன் உன்னிடம் எத்தனை பழங்கள் இருந்தன என்று கேட்டார்.அதற்க்கு பழக்கடைகாரர் அரசனிடம் எனக்கு கணக்கு தெரியது ஆனால் என்னிடம் பழங்களை இரண்டு இரண்டாக பிரித்தால் ஒரு பழம் மிஞ்சும் ,மூன்று மூன்றாக பிரித்தால் இரண்டு பழம் மிஞ்சும்,நான்கு நான்காக பிரித்தால் ஒரு பழம் மிஞ்சும் ஐந்து ஐந்தாக பிரித்தால் நான்கு பழம் மிஞ்சும், ஆறு ஆறாக பிரித்தால் ஐந்து பழம் மிஞ்சும் ஏழு ஏழாக பிரித்தால் ஒன்றும் மிஞ்சாது . அரசனுக்கோ ஒன்றும் விளங்கவில்லை பின் அமைச்சர் விளக்கினார். அமைச்சரின் விடை உங்களுக்கு தெரியுமா ?அமைசரின் விடை
7
:ன் மடங்குகள் 7 ,14,21,28,35,42,49,56,63,70,77,84,91,98,105,112,119,126..........................


2ஆல் வகுத்தால் 1 வருவது : 7,21,35,49,63,77,91,105,119.....
3ஆல் வகுத்தால் 2 வருவது : 35,77,119........
4ஆல் வகுத்தால் 3 வருவது : 35,119..
5ஆல் வகுத்தால் 4 வருவது :119...
6ஆல் வகுத்தால் 5 வருவது :119
7ஆல் வகுத்தால் மீதி வராது எனவே பழக்கடைக்காரரிடமிருந்த பழங்கள் 119 ஆகும்  

1 comments:

  • 15 January 2020 at 19:49
    Apj says:

    Awesome

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates