Thursday, 29 December 2022
விமானத்தில் போகும் போது , மொபைலை ஏன் ப்ளைட்மோடில் போட வேண்டும் ?
Posted by
Guru
,
நாம் காரில் போகும்போது FM கேக்குறோம்னு வைச்சுக்குவோம் , அந்த FM ஒரு குறிப்பிட்ட தூரம் போன , கொரகொரன்னு சத்தம் வரும் சிக்னல் ஒழுங்கா இல்லாம பாட்டு விட்டு விட்டு கேட்கும். அதாவது சிக்னல ரிசீவ் பண்ண நம்ம FM திணறும், அதனால் விட்டு விட்டு கொறகொறன்னு மட்டும் சத்தம் வரும். அதே போல தான் பூமியில் இருந்து பல ஆயிரம் உயரம் பறக்கும் விமானத்திற்கு என்று தகவல் தொடர்புக்க்காக சிக்னல் பயன்படுத்தப்படும். தகவல் தொடர்பு என்பதை தாண்டி Auto Landing கிற்கும் அந்த சிக்னல் தேவைப்படும். அதற்கு பெயர் உணர்திறன். அந்த சிக்னல்களுக்கு இடையூரா இருப்பது செல்போன் சிக்னல்கள். அதாவது காற்றுவழி சிக்னல்கள் அனைத்தும் ரேடியோ அலைவரிசை ஸ்பெக்ட்ரமின் வெவ்வேறு பகுதிகளைப் பயன்படுத்துகின்றன. அப்படி நாம் செல்போன் எரோப்லேன் மோடில் போடாமல் போனால் ACI எனப்படும் Adjacent Channel interference, நிகழும். அதாவது க்ராஸ் டாக் போல. க்ராஸ்டாக் ஏற்படுவதை போல விமானம் எங்கே பறகுதோ அதற்கு அருகிலுள்ள சேனலின் குறுக்கீடு ஒரு இடையூராக மாறி, சிக்னல் தடை ஏற்படுகிறது. ஏசிஐ என்பது ஒரு ரேடியோ ரிசீவர், அருகிலுள்ள அதிர்வெண்ணில் உள்ள டிரான்ஸ்மிட்டரிலிருந்து ஒரு பரிமாற்றத்தை எடுப்பது அதன் வேலை. அதை செல்போன் சிக்னல்கள் குறுக்கிடும் போது விமானிக்கும், கூடவே விமானத்தின் AUTO LANDING சிஸ்டம்க்கும் சேர்த்து தொடர்பு பாதிக்கப்பட்டு அது ஆபத்தில் கொண்டு விடும். அதனால் விமானத்தில் பறக்கும்போது செல்போன் எரோப்லேன் மோட் போடவேண்டியது கட்டாயம்.
Subscribe to:
Post Comments (Atom)