நம்முடை புகைப்படங்கள் / வீடியோக்களை
பதிவேற்றம் (Upload) செய்வது எப்படி ?
முதல் நிலை தேர்வு மெனுவில் Capture எனும் மெனுவின் கீழ் உள்ள Upload என்பதை தேர்வு செய்தால் கூகுள் உள்ளிட்ட பல்வேறு தளங்களுக்கு நமது புகைப்படங்கள் / வீடியோக்களை பதிவேற்றம் (Upload) செய்து கொள்ளலாம் .
நமது தனிப்பட்ட வீடியோக்களை திரைப்பதிவு
செய்வது எப்படி ?
நமது
தனிப்பட்ட வீடியோக்களை திரைப்பதிவு செய்யும் முன் ShareX மென்பொருளின் இரண்டாம் நிலை
தேர்வு நிலையில் உள்ள Task settings என்பதில்
Screen recorder screen recording option என்பதை
தேர்வு தேர்வு செய்து அதில் Audio source என்பதில்
நாம் கணினியில் இணைத்துள்ள ஒலி மூலத்தை தேர்வு
செய்ய வேண்டும் அப்பொழுதுதான் திரைப்பதிவில்
நாம் பேசும் ஒலியும் சேர்ந்து பதிவாகும் இல்லையெனில் ஒலி பதிவாகாது.
நமக்கு வேண்டிய விடியோக்களை திரைப்பதிவினை
பதிவு செய்ய முதலில் ShareX மென்பொருளை திறந்து கொள்ள வேண்டும் பின் அதில் முதல் நிலை
தேர்வில் உள்ள
Workflows start
/Stop screen recording
என்பதை தேர்வு செய்தால் வீடியோ
திரைப்பதிவாக பதிவாக தொடங்கும் நம்முடைய செயல்பாடு
முடிந்தவுடன் Stop என்பதை க்ளிக் செய்தால் நம்முடைய செயல்பாடு வீடியோ ஆக சேமிக்கப்பட்டு
இருக்கும் .
நம்முடைய புகைப்படம் / வீடியோ
எங்கு சேமிக்கப்பட்டு இருக்கும் ?
ShareX
மென்பொருளில் நாம் சேமித்த புகைப்படங்கள் / வீடியோக்களை காண வேண்டும் என்றால் மூன்றாம் நிலை தேர்வு மெனுவில் Screenshot
folder என்பதை தேர்வு செய்தால் அந்த folder திறக்கும் அதை நாம் தேவையான இடங்களிலோ அல்லது
பெண்டிரைவ் போன்ற சோமிப்பகங்களிளோ சேமித்துக்கொள்ளலாம் .
ShareX மென்பொருளில் மூன்றாம் நிலை தேர்வு மெனுவில் History என்பதை தேர்வு செய்தால் நாம் செய்த அனைத்து செயல்களின் History அங்கே சேமிக்கப்பட்டு இருக்கும் . மேலும் Image History என்பதை தேர்வு செய்தால் புகைப்படம் சார்ந்து நாம் செய்த அனைத்து செயல்களின் History அங்கே சேமிக்கப்பட்டு இருக்கும் .
ShareX மென்பொருளில் பல்வேறு சிறப்பியல்பு மென்பொருள் கருவிகள் உள்ளன . நாம் திரைப்பதிவாக சேமிக்கும் புகைப்படங்களை இமேஜ் எடிட்டர் மூலம் அழகாக்கி கொள்ளலாம் . மேலும் பத்திற்கும் மேற்பட்ட சிறப்பியல்பு கருவிகள் உள்ளன . நமக்கான குறுக்கு விசைகளை (Shortcut keys) உருவாக்கி கொள்வது எப்படி ?
ShareX
மென்பொருளில் செயல்புரியும் போது குறுக்குவிசைகளை உருவாக்கி கொள்வது நாம் செய்யும் செயல்கள் விரைவாகவும் எளிதாகவும்
அமையும் குறுக்கு விசைகளை பெற இரண்டாம் நிலை தேர்வு மெனுவில் Hot key settings என்பதை
தேர்வு செய்தால் குறுக்கு விசைகளை அமைத்துக்கொள்ளலாம்
ShareX மென்பொருளில் செயல்புரியும் போது மென்பொருளின் Settings களை நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ள Task key settings உதவுகிறது . மென்பொருளின் பல்வேறு settings களை நாம் நம் விருப்பம் போல மாற்றியமைத்துக்கொள்ளலாம் .
விலை
கொடுத்து வாங்கினாலும் கிடைக்காத பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த இலவச மொன்பொருள்
ShareX இல் கிடைக்கின்றன . இந்த வசதிகள் மூலம் நாமே மிக மிக
எளிதாக கல்வியல் சார்ந்த நமது சொந்த வீடியோக்களை உருவாக்கி கொள்ளலாம் .