ShareX
எனும் மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம்
செய்து நமது கணினில் பதிவு(Instal) செய்து விட்டால் போதுமானது நமது கணினினியின் திரையினை
திரைப்பதிவாக பதிவு செய்து கொள்ள முடியும் . இம்மென்பொருள் முற்றிலும் இலவசமானது மற்றும்
மிக குறைந்த அளவு 7 MB நினைவக கொள்ளளவு உடையதால்
விரைவாகவும் எளிதாகவும் பணியாற்ற முடியும் .
நமது கணினியில் ShareX எனும் மென்பொருளினை டவுன்லோட் செய்த பிறகு அதை இன்ஸ்டால் செய்து அதை திறந்தால் கீழ்கண்டவாறு அதன் முகப்பு தோற்றம் கிடைக்கும் இதில் இடது புறம் மெனுகளும் வலது புறம் நாம் மாற்றியமைக்க கூடிய குறுக்கு விசைகளும் இருக்கும் .
இதில் மூன்று தேர்வு நிலைகளில்
மெனுக்களும் சப்மெனுக்களும் உள்ளன . இதில்
முதல் நிலை தேர்வில்
v Capture
v Upload
v Workflows
v Tools
இரண்டாம் நிலை தேர்வில்
v After
capture Task
v After
Upload Task
v Destinations
v Application
settings
v Task
settings
v Hotkey
settings
மூன்றாம் நிலை தேர்வில்
v Screen
shots folder
v History
v Image
histoy
v News
v Debug
v Donate
v About
ஆகிய மெனுக்கள் உள்ளன . இதில்
முக்கோண வடிவில் உள்ள ஐகானை க்ளிக் செய்து தேர்வு செய்வதின் மூலம் துணை நிலை மெனுக்களை
பெறலாம்
v புகைப்படங்களை
திரைப்பதிவு செய்வது எப்படி ?
நமக்கு வேண்டிய புகைப்படங்க்ளை
திரைப்பதிவினை பதிவு செய்ய முதலில் ShareX மென்பொருளை திறந்து கொள்ள வேண்டும் பின்
அதில் முதல் நிலை தேர்வில் உள்ள
Capture
- Full screen
என்பதை தேர்வு செய்தல் நம்முடை
ஆக்டிவ் விண்டோ புகைப்படமாக சேமிக்கப்படும் .
Capture
Window
என்பதை தேர்வு செய்தல் கடைசியாக
செயல்பட்ட செயல்களின் விண்டோக்கள் இருக்கும்
அதில் நமக்கு தேவையானவற்றை செலக்ட் செய்தால் அந்த விண்டோ புகைப்படமாக சேமிக்கப்படும்
.
Capture
- Monitor
என்பதை தேர்வு செய்தல் நம்முடை
ஆக்டிவ் விண்டோ புகைப்படமாக சேமிக்கப்படும் .
Capture
Region
என்பதை தேர்வு செய்தல் நம்முடை
ஆக்டிவ் விண்டோவின் நமக்கு தேவையான பகுதியை
புகைப்படமாக சேமித்துக்கொள்ளலாம் . .
Capture
- Region
(Light)
என்பதை தேர்வு செய்தல் நம்முடை
ஆக்டிவ் விண்டோவின் நமக்கு தேவையான பகுதியை
புகைப்படமாக சேமித்துக்கொள்ளலாம் . இம் மெனுவின் சிறப்பம்சம் நமது புகைப்படத்தின்
பின்புறங்கள் நீக்கப்பட்டு இருக்கும்
Capture
- Region
( Transparent )
என்பதை தேர்வு செய்தல் நம்முடை
ஆக்டிவ் விண்டோவின் நமக்கு தேவையான பகுதியை
புகைப்படமாக சேமித்துக்கொள்ளலாம் . இம் மெனுவின் சிறப்பம்சம்மும் நமது புகைப்படத்தின்
பின்புறங்கள் நீக்கப்பட்டு இருக்கும்
மீண்டும் அடுத்த பகுதியில் தொடருவோம்.....