Tuesday, 19 October 2021

திரைப்பதிவு ( Screen Recording ) -Part 1

,


 

திரைப்பதிவு ( Screen Recording ) என்பது நீங்கள் காணும் கணினி அல்லது அலைபேசியின் திரையை புகைப்படமாகவோ அல்லது காணொலியாகவோ பதிவு செய்வது ஆகும் . கணினியில் விளையாடும் விளையாட்டுக்களையோ , மென்பொருட்களின் செயல்பாடுகள்ளை விளக்கும் காணொலிகளையோ திரைப்பதிவாக பதிவு செய்ய முடியும் . திரைப்பதிவில் ஒளி மற்றும் ஒலி ஆகிய இரண்டையும் தனித்தனியாகவோ அல்லது இரண்டையும் ஒன்று சேர்த்தோ திரைப்பதிவு செய்ய முடியும் திரைப்பதிவு ( Screen Recording ) என்பது ஒரு பயன்மிக்க அம்சமாகும் .திரைப்பதிவினை எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைக்க முடியும் . நம் நண்பர்களுக்கோ , உறவினர்களுக்கோ திரைப்பதிவினை அனுப்பி வைக்க முடியும்  .

ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள விரைவு பதில் (QR code) குறியீட்டிற்கு ஏற்ற காணொலிகளையோ ஆன்லைன் பாடதிட்டங்களையோ உருவாக்க திரைப்பதிவு ( Screen Recording )வினை பயன்படுத்த முடியும் மேலும் ஆன்லைனில் நேரிடையாக ஒளிபரப்பப்படும் படத்திட்டங்களை பதிவு செய்ய திரைப்பதிவு உதவுகின்றது .

கணினி அல்லது அலைபேசியின் முன்புறம் உள்ள கேமராவை  இயக்கினால் திரைப்பதிவுடன் திரையில் தோன்றி நாம் பேசும் சொந்த காணொலியையும் திரைப்பதிவி னையும் ( Screen Recording ) ஒரே நேரத்தில் பதிவு செய்ய முடியும் .எந்த ஒரு மென்பொருள் பயன்பாட்டின் பயிற்ச்சிகளையும் பதிவு செய்வதற்கு திரைப்பதிவு சிறந்தது . யூடூப்பில் (Youtube ) காணொலிகள் பதிவேற்றம் செய்பவர்களோ , மென்பொருள் உருவாக்குநர்களோ தங்கள்பயன்பாடுகளின் பயன்பாட்டை விளக்க திரைப்பதிவு காணொலிகளையே பயன்படுத்துகின்றனர்  


திரைப்பதிவு செய்வதற்கு பல்வேறு வணிக மற்றும் இலவச மென்பொருள்கள் உள்ளன இதில் நாம் கற்றுக்கொள்ள போவது விலையில்ல கற்றற்ற மென்பொருள் (Free and open source ) ஆன ShareX எனும் பல்வேறு  சிறப்பம்சங்களை உள்ளடக்கிய  திரைப்பதிவு மென்பொருள் ஆகும் . மீண்டும் அடுத்த பதிவில் ShareX மென்பொருள் குறித்து விரிவாக கற்போம் .


1 comments:

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates