
வணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு
அறிவியல் பதிவோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நம்முடைய தினசரி வாழ்விலும்
பல்வேறு உள்நாட்டு போர்களில் எதிரிகளை அழிக்கவும்
பயன்படுத்தும் பாஸ்பரஸ் நம்முடைய உயிரின் அடிப்படை சாராம்சம் உங்களுக்கு தெரியுமா
? வாருங்கள் அறிந்து கொள்வோம் .
பாஸ்பரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கதை
பன்னெடுங்காலாமாகவே உலோகங்களை
தங்கமாக்கும் இரசவாத முயற்சிகள் நடைபெற்று வந்து இருக்கின்றன குறிப்பாக பதினைந்தாம்
நூற்றாண்டில் இம்முயற்சிகள் அதிகரித்தன . ஐரோப்பிய வியாபாரியான ஹென்னிங் பிராண்ட்டும்
இம்மாதிரியான இரசவாத முயற்சிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார் 1969 ஆண்டில் சிறுநீரை
சுத்தப்படுத்த ஒரு தாதுப்பொருளை போட்டு காய்ச்சிக்கொண்டு இருந்தார் .குடுவையின் அடியில்
படிந்திருந்த பொருள் பசும்மஞ்சள் ஒளியில் மின்னிக்கொண்டு தீடீரென தீப்பிடித்து...