
இன்று உலகை எத்தனையோ நோய்கள் பயமுறுத்திக்கொண்டு உள்ளன ஆனால் ஸ்கர்வி ,பெரிபெரி போன்ற நோய்கள் உலகையே உலுக்கிய கதை உங்களுக்கு தெரியுமா ? இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்து போன சோக வரலாறு உங்களுக்கு தெரியுமா ? வாருங்கள் தோழர்களே வரலாற்றைப்புரட்டி பார்ப்போம்
கி.பி 1453 இல் கான்ஸ்டான்டிநோபிளை கைப்பற்றிய பிறகு இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு புதிய கடல் வழி கண்டுபிடிப்பது அவசியமாகிபோனது இதனால் ஐரோப்பாவில் இருந்து ஆயிரக்கனக்கான மாலுமிகளும் , வியாபாரிகளும் புதிய உலகை காண மாதக்கணக்கிலும் , ஆண்டுக்கணக்கிலும் பயணங்கள் மேற்க்கொண்டனர் இவர்களை மரண பயத்திற்கு உள்ளாக்கும் ஒரு நோய் இருந்தது அதன் பெயர் ஸ்கர்வி பற்களில் வடியும் இரத்தத்துடன், அதீத களைப்புடன் வெளுத்தமுகத்துடனும் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் ஸ்கர்வி பாதித்தவர்களை...