காதலி
ஐந்தரை அடியில்
படுத்து இருக்கிறது
செவ்வக நிலா
தீராமல் தவிக்கும் குரல்
எங்கிருந்தோ தீராமல்
தவிக்கும் பறவையின் குரலாய்
அலைகிறது உன்
நினைவுகள்
தொலைந்து போகும் வாழ்க்கை
பிரிவின் கடைசி வினாடியில்....
உன் இயலாமையின்
ஆறுதலுக்கு தெரியாது
காமத்தின் எச்சங்களில்
தொலைந்து போகும் வாழ்க்கை என்று
நல்ல கருத்து கொண்ட கவிதைகள்...என்னு நான் சொல்ல மாட்டேன்...நல்லா இருக்கு அவ்வளவுதான்
குறுங்கவிதைகள் நன்று. இரண்டாவது எனக்கு ரொம்பப் பிடித்தது.
குருசார்... கவிதைகள் ரசிச்சுப் படிக்க வைச்சது.
குருவின் குறுங்கவிதைகள் நன்று