ஆசிரிய நண்பர்களே தற்போது நாம் பயன்படுத்திவரும் முப்பருவ கல்வி முறையில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பிடலில்(CCE) மாணவச்செல்வங்களின் நன்னலம் ,யோகா , உடற்பயிற்சி, பாட இணைச்செயல்பாடுகள், கல்வி இணைச்செயல்பாடுகள் , மனப்பான்மைகள் மற்றும் மதிப்புகள் போன்ற பல்வேறு உள்ளார்ந்த திறன்களையும் மதிப்பிட்டு வருகிறோம் இவற்றையெல்லாம் குறிப்பேடுகளில் பதிய வைத்து பராமரிப்பது மிகவும் கடினம் மேலும் இம்முறையில் உயர் அலுவலகங்களில் இருந்து கேட்கப்படும் படிவங்களை தயாரிக்க நாள் முழுக்க செலவிடவேண்டி உள்ளது இக்குறையை போக்க வந்துவிட்டது முப்பருவ கல்வி முறைக்கான CCE E-Register இதன் மூலம் முப்பருவ கல்வி முறையின் தொடர் மற்றும் முழுமையான மதிப்பிடல்(CCE) படிவங்களை மிக மிக எளிதாக தயாரிக்க முடியும் இது ஒரு ஆசிரிய நண்பரின் அரும்பணி . மைக்ரோசாப்ட் எக்ஸல் வடிவில் அவர் தயாரித்து இருக்கும் இந்த பைலில் 50000 ஃபார்முலாக்களை அவர் பயன்படுத்தி உள்ளார் அவருடைய வலைத்தள முகவரி www.kalvisms.blogspot.in CCE E-Register முற்றிலும் இலவசமாக பெற கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டியை கிளிக் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்
பதிவிறக்கம் ட்டிசெய்துவிட்டீர்களா ? உங்களுக்கு வின்ரார் வடிவில் ஒரு கோப்பு கிடைத்து இருக்கும் அதை அன்ஸிப் செய்தால் CCE E-Register எக்ஸல்வடிவ கோப்பு , அதை பயன்படுத்தும் முறை மற்றும் அதற்கு தேவையான ஃபான்ட் ஆகிய அனைத்தும் இருக்கும் .
டிஸ்கி
இதை வாசிக்கும் நண்பர்களே உங்களது உறவினர்களோ, நண்பர்களோ ஆசிரியராக இருப்பின் அவர்களுக்கு இந்த CCE E-Register ஐ கொடுத்து உதவுங்கள் மேலும் இதை உருவாக்கிய நண்பரின் வலைத்தளத்திற்கு சென்று அவரின் முயற்சிக்கு ஊக்கம் தாருங்கள் அவரின் வலைத்தளத்தில் வருமானவரியை கணக்கிட உதவும் எக்ஸல் வடிவ கோப்பும் உள்ளது பதிவிறக்கி பயன்பெறுங்கள்