Monday 14 May 2012

செவ்வக நிலா

,

காதலி


ஐந்தரை அடியில்
படுத்து இருக்கிறது
செவ்வக நிலா


தீராமல் தவிக்கும் குரல்


எங்கிருந்தோ தீராமல்
தவிக்கும் பறவையின் குரலாய்
அலைகிறது உன்
நினைவுகள்


தொலைந்து போகும் வாழ்க்கை



பிரிவின் கடைசி வினாடியில்....
உன் இயலாமையின்
ஆறுதலுக்கு தெரியாது
காமத்தின் எச்சங்களில்
தொலைந்து போகும் வாழ்க்கை என்று

உன் நினைவை அள்ளி உயிரெங்கும் பூசிக்கொள்கிறேன்

,

நீ இல்லாத
பொழுதுகளின் வெம்மைகளில்
உன் நினைவை அள்ளி
உயிரெங்கும்
பூசிக்கொள்கிறேன்
உயிர்த்திருத்தலுக்கு
சகதியை தேடும் நண்டாய்

Saturday 5 May 2012

மொபைல் மூலமாக பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களுக்கு தமிழில் உள்ளீடு செய்வது எப்படி ?

,
மொபைல் மூலமாக தமிழில் உள்ளீடு செய்வது எப்படி என்பது எனக்கு புதிராகவே இருந்தது ஆனால் எனது பிரச்சனையை நோக்கியா மொபைல் தீர்த்துவிட்டது . நோக்கியாவின் 2690 ,சி 1 போன்ற பல மொபைல்களில் பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களுக்கு தமிழ் உள்ளீடு செய்ய முடியும் ஆம் நண்பர்களே மொபைலில் ஒரு எளிய செய்கை மூலம் தமிழில் பதிவிடலாம், கருத்துரை வழங்கலாம், பேஸ்புக்,ட்வீட்டர் போன்றவைகளுக்கு தமிழில் உள்ளீடு செய்து வலையுலகை கலக்கலாம்

நண்பர்களே மொபைலில் ஓபரா பிரௌசர் இருந்தால் தமிழ் தளங்களை வாசிக்கலாம்
ஓபரா இன்ஸ்டால் செய்து தமிழ் தளங்களை
வாசிப்பது எப்படி என்ற எனது பதிவிடலை படிக்க இங்கே கீழ்கண்ட சுட்டியை இயக்குங்கள்

<http://www.nilanilal.blogspot.com/2011/06/blog-post_7760.html?m=1>



வாருங்கள் தோழர்காளே மொபைல்களில் தமிழை எப்படி உள்ளீடு செய்யலாம் என அறிந்து கொள்வோம்

உங்களது நோக்கியா மொபைலில் settings பகுதியில் language settings   என்பதை தேர்வு செய்யவும் அதில் தமிழ் இருந்தால் நீங்கள் தமிழில் உள்ளீடு செய்ய முடியும்

மொபைலில் ஓபரா பிரௌசர் மூலம் பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் போன்ற தளங்களை திறந்து கொள்ளுங்கள் பின்பு உள்ளீடு செய்ய வேண்டிய இடத்திற்கு வாருங்கள் உங்களது மொபைலில் ஆங்கிலம் டீபால்ட்டாக உள்ளதால் ஆங்கிலத்தில் தான் உள்ளீடு செய்ய முடியும் .  எனவே இப்போது இடதுபக்கம் options  , என்பதில் writing options என்பதை தேர்வு செய்யவும் இப்போது கிடைக்கும் மெனுவில் தமிழ் என்பதை தேர்வு செய்யுங்கள் அவ்வளவுதான் இனி நீங்கள் தமிழில் உள்ளீடு செய்யலாம்
1  என்பது புள்ளி வைக்க
2  என்பது அ, ஆ ,இ,ஈ,உ,ஊ என்ற எழுத்துகளுக்கும் மேலும் ஒரு எழுத்தை அடித்துவிட்டு அதற்கு கொம்பு, கமா போடுவதற்கும்
3 என்பது எ,ஏ,ஐ,ஒ என்ற எழுத்துகளுக்கும் மேலும் ஒற்றை கொம்பு , இரட்டைக்கொம்பு போடுவதற்கும்
4 என்பது க,ங,ச,ஞ போடுவதற்கு
5 என்பது ட,ண,த,ஞ,ந போடுவதற்கு
6 என்பது ப,ம,ய போடுவதற்கு
7 என்பது ர,ல,வ போடுவதிற்கு
8 என்பது ழ,ள,ற,ன போடுவதிற்கு
9 என்பது ஜ,ஸ,ஹ போன்றவைகளுக்கு

நண்பர்களே மேற்கண்ட குறிப்புகளின்படி முதலில் தமிழில் மெஜேஜ் டைப் செய்து பழகவும் நீங்கள் தமிழில் விரைவாக டைப் செய்து பழகிவிட்டீர்கள்  என்றால் மொபைல் மூலமாக பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களுக்கு தமிழில் உள்ளீடு செய்யும் போது விரைவாக உள்ளீடு செய்ய முடியும் கையில் மொபைலும் இணைய இனைப்பும் உங்களிடம் இருந்தால் பதிவிடலாம் , ட்வீட்டலாம் , பேஸ்புக்கில் கருத்துரை வழங்கலாம் அப்புறமென்ன தோழர்களே வலையுலகே உங்கள் கைகளில் .

டிஸ்கி
நோக்கியாவின் விலை உயர்ந்த மொபைல்களிலோ, ஸ்மார்ட்போன்களிலோ தமிழை உள்ளீடு செய்ய முடியாது ஏன் எனில் writing options என்பதில் தழிழ் இல்லை
இது போன்ற பதிவினை ஏற்கனவெ யாராவது பதிவிட்டு இருக்கிறார்களா என  எனக்கு தெரியாது தற்செயலாக ட்வீட்டரில் ட்வீட் செய்யும் போது அறிந்து கொண்டேன் எனக்கு தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். பயன்படுத்திபார்த்துவிட்டு கருத்துரை கூறவும்

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates