Friday 5 August 2011

எல்லையில்லா பிரபஞ்ச வெளியில் இயற்கையின் கடிகாரம்

,

                                      
எல்லையில்லா பிரபஞ்ச வெளியில்  இயற்கையின் கடிகாரம் ஒன்று சீராக இயங்கி கொண்டு  இருக்கிறது .ஆங்கிலத்தில் பல்சர்(pulsar) என்று அழைக்கப்படும் துடிக்கும் விண்மீன்கள் தான் அந்த இயற்க்கையின் கடிகாரம் .துடிக்கும் விண்மீன்களை இயற்பியல் முறைப்படி கூறினால் அவைகள் சுழலும் நியூட்ரான் விண்மீன்கள் ஆகும்.

நியூட்ரான் விண்மீன்கள் என்பது “ ஒரு விண்மீன் தன்னுடைய உள்ளாற்றலை எல்லாம் பயன்படுத்திய பின்னர் அளவிட முடியாத அடர்த்தியை அடையும் நிலை ஆகும் “ இந்த நியூட்ரான் விண்மீகள்தான் கருங்குழிகள் (Black hole) ஆக மாறுகின்றன .
( குறிப்பு -  கருங்குழிகள் (Black hole) பற்றி ஒரு விரிவான பதிவை பதிவிடலாம் என எண்னியிருப்பதால் கருங்குழிகள் பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன் ) 

துடிக்கும் விண்மீன்கள் பரப்பளவில் பத்து கிலோமீட்டர்கள் அளவில் இருப்பினும் அவற்றில் அளவிட முடியாத அடர்த்தி இருக்கிறது .ஒரு கன சென்டிமீட்டருக்கு பத்து மில்லியன் கிராம் இருக்கும் அதாவது ஒரு குண்டூசியின் எடை பல நூறு டன்களாக  இருக்கும் . கற்பனைக்கே  எட்டாமல்  இருக்கிறதா  இதுதான் நிஜம். இவ்வளவு அடர்த்தி இருப்பதால்தான் வேகமாக சுழன்றாலும்  ஒரே பொருளாக நீடிக்கின்றது .
சாதாரண விண்மீன்கள் வினாடிக்கு ஒருமுறை சுழன்றாலே அவைகள் சீர்குலைந்துவிடும் ஆனால் துடிக்கும் விண்மீன்கள் ஒரு வினாடியில் பல முறை சுழலுகின்றன. துடிப்பின் அழுத்தம் வேறுபட்டாலும் துடிப்புக்காலம் மிக சீராக இருந்து வந்துள்ளது .துடிக்கும் விண்மீகள் ஒரு வினாடிக்கு 30 முறை சுழன்றால் ஒரு துடிப்பு 33 மில்லி வினாடி நீடிக்கும்( ஒரு மில்லி வினாடி என்பது ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு) துடிப்பின் காலவரை மிகமிகத் துல்லியமாக இருந்து வருகிறது. PSR+1977+214 என்ற துடிக்கும் விண்மீன் ஒரு வினாடியில் ஆயிரம் முறைக்கு மேல் துடிக்கும் தன்மை கொண்டதாகும் . ஒரு துடிப்பு 1.5578 மில்லி வினாடியே நீடிக்கிறது   இரட்டை துடிக்கும் விண்மீன்களையும் PSR1257+12, PSR 1913+16, போன்ற நூற்றுக்கணக்கான துடிக்கும் விண்மீகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
நமது பால்வெளித்திரளிள் பல ஆயிரக்கணக்கான துடிக்கும் விண்மீன்கள் உள்ளது என வானியல் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பிரபஞ்ச வெளியால்  ஈர்க்கப்பட்டு 40,000 ஒளி ஆண்டுகள் தொலைவுள்ள ஆரத்தில் 2000 ஒளி ஆண்டுகள் வரை  கோடிக்கணக்கான துடிக்கும் விண்மீகள் பரவியுள்ளதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. எது எப்படியோ பிரபஞ்சம் குழுங்க குழுங்க துடிக்கும் விண்மீகளின் ஆட்டம் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.

0 comments to “எல்லையில்லா பிரபஞ்ச வெளியில் இயற்கையின் கடிகாரம்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates